கணவர் இறப்புக்கு பின் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மீனா : மகளோட சந்தோஷம் தான் முக்கியம்!!

Author: Vignesh
2 January 2023, 8:00 pm

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி இருக்கிறது.

சிறுவயதில் இருந்து நடித்துவரும் மீனா குழந்தை நட்சத்திரம், நாயகி, இப்போது அண்ணி, அம்மா போன்ற வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

meena - updatenews360 3

இடையில் தான் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டது. அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார், அவருக்காக அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.

கணவர் இழப்பை தாங்க முடியாத மீனா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து வெளியே வருகிறார். அவ்வப்போது தனது கணவர் குறித்த பதிவுகள் போட்டு வருகிறார்.

meena - updatenews360 2

இந்நிலையில், நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி, அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

meena - updatenews360 2

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மீனா நடித்திருந்தார்.

நடிகை மீனா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகையை பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் கொண்டாடிய வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

meena - updatenews360 2

இந்நிலையில் மீனாவின் மகள் நைனிகா, நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். மகள் நைனிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் “உயர உயர பற அன்பு மகளே.. உனக்கு வானம் கூட எல்லை இல்லை. சூரிய கதிர்கள் போல எப்பொழுதும் பிரகாசமாக உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடு”. என தனது மகளுக்கு நடிகை மீனா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu