அப்பளம் போல நொறுங்கிய ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் ; ஒருவர் பலி.. சபரிமலை சென்றுவிட்டு திரும்பிய போது சோகம்!!

Author: Babu Lakshmanan
3 January 2023, 12:07 pm

திண்டுக்கல் ; சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விருதலைபட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சத்யசாய் ஜில்லா கதிர் மண்டலம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் கடந்த 31 11.2022 ஆம் தேதி சபரிமலை யாத்திரை சென்று சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, விடுதலை பட்டி என்ற பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பக்தர்கள் வந்த வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சிராமுலு நாயக் 42 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், ஐந்து பேருக்கு படுகாயம் அடைந்த நிலையில், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu