பிரபல நடிகருடன் குடி, கும்மாளம்… இரவு பார்ட்டியில் லிப் லாக் செய்த தமன்னா : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 2:45 pm

தமன்னா அவரது காதலருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

தமன்னா தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியாக தனது வேலைகளை பார்த்து வருகின்றார். தென்னிந்திய சினிமா மட்டுமின்றி சமீபகாலமாக அவர் ஹிந்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமீப காலமாக தமன்னா கிளாமர் அதிகமாகவே காட்டி வருகின்றார்.

எனினும் தற்போது தமன்னா பிரபல நடிகர் உடன் டேட்டிங் சென்று இருக்கிறார் என்றும், அவருக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் தான் தமன்னா கோவாவில் புத்தாண்டு பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார். தமன்னா பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் உடையில் வந்திருந்தார்.

அத்தோடு பார்ட்டியில் அவர்கள் ஜோடியாக நடனமாடி இருக்கிறார்கள். அதன் பின் புத்தாண்டு பிறந்ததை கொண்டாட வாணவேடிக்கையோடு இவர்கள் லிப் லாக் செய்து இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!