இயர் பட்ஸ் இல்லாமல் காதுகளை சுத்தம் செய்ய உதவும் மூன்று பாதுகாப்பான வழிகள்!!!
Author: Hemalatha Ramkumar4 January 2023, 2:06 pm
ஒரு சிலருக்கு அடிக்கடி காதுகளை சுத்தம் செய்யும் பழக்கம் உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறு மற்றும் மிகவும் ஆபத்தானதும் கூட. கடினமான கூர்மையான பொருள்களைக் கொண்டு காதை சுத்தம் செய்வது உங்கள் காதுகளுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும். இயர்பட்கள் அல்லது காட்டன் ஸ்வாப்கள் சிறந்த தேர்வுகள் என்றாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது. எனவே, மெலிதான அழுக்கை எவ்வாறு அகற்றுவது? இயர்பட்களைப் பயன்படுத்தாமல் காது மெழுகுகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
காது மெழுகு என்பது நமது காதுகளுக்குள் உருவாகும் ஒரு ஒட்டும் பொருளாகும். இந்த ஒட்டும் பொருளானது பாக்டீரியா, பூஞ்சை மற்றும் தண்ணீர் போன்றவற்றில் இருந்து நமது காதுகளைப் பாதுகாப்பதோடு சுத்தம் மற்றும் உயவூட்டலுக்கும் உதவுகிறது. எனவே, காது மெழுகு அழகற்றதாகவும், சுத்தம் செய்ய வேண்டிய ஒன்றைப் போலவும் தோன்றலாம். ஆனால் அது உண்மையில் உங்கள் காதுகளைப் பாதுகாக்கிறது. பெரும்பாலும், மெழுகு அதிகமாக இருப்பது காது தொற்று மற்றும் செவிப்புலன் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மேலும் காது மெழுகு அகற்றுவது முக்கியம்.
இயர்பட் பயன்படுத்தாமல் வீட்டிலேயே காது மெழுகு நீக்க சில வழிகள்:
●ஹைட்ரஜன் பெராக்சைடு:
ஒரு பருத்திப் பந்தை நீர்த்த ஹைட்ரஜன் பெராக்சைடில் ஊற வைத்து சில துளிகள் காதில் விடவும். உங்கள் தலையை சற்று சாய்த்து இதை ஊற்றவும். அந்த நிலையில் ஓரிரு நிமிடங்கள் வைத்திருங்கள். இதனால் திரவம் மெழுகு வழியாக கீழே இழுக்கப்படும். பின்னர் தலையை சாய்த்து, திரவம் மற்றும் மெழுகை வெளியேற்றவும்.
●எண்ணெய்
ஒரு காட்டன் பந்தைப் பயன்படுத்தி, உங்கள் காதில் சிறிது எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காது மெழுகலை மென்மையாக்க உதவுகிறது. பின்னர் அதை இயர்பட் மூலம் அகற்றுவது எளிதாக இருக்கும். பேபி ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்ற உங்களுக்கு விருப்பமான எண்ணெயை வெதுவெதுப்பாக சூடாக்கியும் உபயோகிக்கலாம்.
●கிளிசரின்
கிளிசரின் எண்ணெயைப் போலவே வேலை செய்கிறது. எண்ணெயைப் பயன்படுத்திய பிறகு உங்கள் காதுகள் ஒட்டாமல் இருக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் கிளிசரின் சில துளிகள் பயன்படுத்தலாம். கிளிசரின் காது மெழுகு அகற்ற உதவுகிறது மற்றும் உங்கள் காதுகளின் தோலை மென்மையாக்கும்.