லாரி – மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து : மாடு வாங்க சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 11:36 am

கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் லாரி நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச் சேர்ந்த சரவணன், மாரியப்பன் இருவரும் டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில் மாடு வாங்குவதற்காக காங்கேயம் செல்வதற்கு திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே வாய்க்கால் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து அரியலூர் பகுதிக்கு சாக்கு பை ஏற்றி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், மாடு வாங்க வந்த சரவணன், மாரியப்பன் சம்பவ இடத்தில் பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!