எல்லாத்துக்கும் காரணம் அது தான்..! திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து : காரணத்தை வெளியிட்ட பிரபல விஜே..!

Author: Vignesh
6 January 2023, 5:00 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

vj ramya - updatenews360

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவார்.

இதனிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயராம் என்ற ஆடிட்டர் ஒருவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2015ல் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சமீபத்திய ஒரு பேட்டியொன்றில் விவாகரத்து தொடர்பான சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். என் வாழ்க்கையில் நடப்பது என்னை சார்ந்தது என்றும், எல்லாத்தையும் அவர்களுக்கு விவரிக்க முடியாது எனவும், திருமணம் என்பது முக்கியம் தான்.

vj ramya - updatenews360

ஆனால், ஒரு டிக் மார்க் பெண்களுக்கு இருக்க கூடாது எனவும், அதில் திருமணம் செய்து குழந்தையை பெத்துக்கணுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். யாரை திருமணம் பண்ணனும், பெத்துக்கணுமா என்பது அவர்களின் தனிபட்ட விருப்பம் என்று என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

vj ramya - updatenews360

எனக்கு ஒரு சரியான காரணம் இருந்தது அதனால் அதை செய்தேன் என்றும், என்னுடைய வாழ்க்கையை நான் எழுதி இருக்கிறேன் எனவும், வேறொரு வாழ்க்கை வருவது பார்ப்போம் என்று விஜே ரம்யா தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 392

    0

    0