இப்படியும் Like வாங்கலாமா..? அப்போ.. அந்த படத்தோட லைக்ஸ் எல்லாம் பொய்யா கோபால்..!

Author: Vignesh
7 January 2023, 10:00 am

2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு, அஜித்குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இரு படங்களுமே ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால், எந்த படம் வெற்றி பெரும் என்பதைத் தாண்டி, எந்த படத்தை எந்த படம் வீழ்த்தும் என்றே இரு நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான துணிவு ட்ரெய்லர், கலவையான விமர்சனங்களைப் பெற்று, யூடியூபில் அதிகமான பார்வைகளைக் குவித்து வந்தது.

மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது. பின்னர், விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லர் வெளியானது. குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக, செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல் என கலவையான காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, வெளியான 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில், துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது.

வெளியான 24 மணி நேரத்தில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் 2.3 கோடி பார்வைகளைக் கடந்திருக்கும் நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் 2.5 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது.

வாரிசு பட தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லர் ஒட்டு மொத்தமாக 3.2 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதும், யூடியூப் ட்ரெண்டிங்கில் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளி வாரிசு பட ட்ரெய்லர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதும், வெளியான ஒரு மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில் வாரிசு படமே வெற்றி பெற்றிருந்தது.

இதனிடையே, படத்தின் ட்ரைலர் மிகவும் செண்டிமெண்ட்டாக் இருந்தாலும் கண்டிப்பாக படம் செம்ம மாஸான பேமிலி படமாக இருக்கும் என்றே எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் லைக்ஸ் எல்லாம் Bot மூலம் பெறப்பட்டது, அதனால் தான் இவ்வளவு லைக்ஸ் என்ற தகவல் பரவி வருவதால் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?