பதவி விலகுவதாக அமைச்சர் திடீர் அறிவிப்பு… அமைச்சரவையில் திடீர் மாற்றம் : பரபரக்கும் ஆளுங்கட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2023, 2:59 pm

பஞ்சாப்பில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரசை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை பிடித்தது.

அக்கட்சியின் வெற்றிக்கு டெல்லி முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலின் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் கைகொடுத்தன.

இதன்பின்னர் அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவரது அமைச்சரவையில் மந்திரியாக பொறுப்பேற்று கொண்டவர் பாஜா சிங் சராரி.

இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகும் முடிவை பாஜா சிங் இன்று வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, கட்சியின் உண்மையான விசுவாசியாக தொடர்ந்து நீடிப்பேன். இந்த மந்திரி பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன்.

கட்சியில் ஒரு போர் வீரனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார். இதனையடுத்து, பஞ்சாப் அமைச்சரவையில் பல மந்திரிகளின் பதவி மாற்றியமைக்கப்பட கூடும் என கட்சியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?