கோவை – பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2023, 1:42 pm
கோவை – பல்லடம் இணைப்பு சாலைக்கு, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும் என அவரது நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பொள்ளாட்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- மனிதப்பண்பில் சிறந்ததுடன் செல்வத்தை அறநெறிக்கு பயன்படுத்தியவர் பொள்ளாட்சி மகாலிங்கம்.
திருக்குறளை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவியவர் பொள்ளாட்சி மகாலிங்கம். கோவை – பல்லடம் இணைப்பு சாலைக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் பெயர் சூட்டப்படும். பன்முக ஆற்றல் படைத்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். இவ்வாறு அவர் பேசினார்.