பழனி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 3:12 pm

பழனி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுபாணி சுவாமி இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், ஐயப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் வந்து உள்ளதாலும் மேலும் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டமும் வர துவங்கி உள்ளதாலும் பழனி கோவிலுக்கு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.

அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்பு, கட்டணம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும்‌ பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதே போல ரோப் கார், மின்இழுவை ரயில்‌நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் ரோப்கார் ,மற்றும் மின் இழுவை ரயிலுக்கு சுமார் மூன்று மணி நேரம் வரையிலும் தரிசனத்திற்கு 5 மணி நேரம் வரை காத்திருந்து.

மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும்‌நிலை ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?