நடக்கும்போது..பேசும்போது..அழும்போது.. கூட அப்படி இருக்க கஷ்டமா இருந்தது.. சமந்தாவின் பதிவு வைரல்..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 3:00 pm

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Samantha_Updatenews360

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழில் நல்ல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Samantha_Updatenews360

இந்நிலையில், இயக்குனர் குணசேகர் எழுத்து மற்றும் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகும் திரைப்படம் “சகுந்தலம்”. பான் இந்திய படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. Gunaa DRP – Teamworks சார்பில் நீலிமா குணா, இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இபடத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீன் மகள் அல்லு அர்ஹா இப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை சமந்தா, தனது நாயினுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு, “சகுந்தலம் படப்பிடிப்பில் கஷ்டமான விஷயமே, நடக்கும்போதும், பேசும்போதும், ஓடும்போதும்… அழுகும் போது கூட அழகையும் தோரணையையும் பேணுவதுதான். இது என்னுடைய விஷயம் அல்ல.. அதற்கு பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. அங்கே சாஷாவை (வளர்ப்பு நாய்) அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.. இது அவளது விஷயமும் அல்லவே!” என சமந்தா பதிவிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 612

    2

    1