மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து ; 50 ஆயிரம் பொங்கல் வேஷ்டி, சேலைகள் எரிந்து நாசம்.. திட்டமிட்ட சதியா..? என விசாரணை!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 10:19 am

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் எரிந்து சம்பலாகியது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் (நுகர் பொருள்) அலுவலகத்தில் சுமார் இரவு ஒரு மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் இந்த வருடம் தமிழாக அரசால் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்க இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பில்லான 50 ஆயிரம் வேட்டி, சேலை கம்ப்யூட்டர், ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.

இதனை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?