இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடக்கம் : முக்கிய வீரர் அவுட்.. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 6:11 pm

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடுகின்றன.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். கேப்டன்ஷிப்பில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நாளைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bumrah - Updatenews360

ரோகித் சர்மாவை தொடர்ந்து, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் விபரம் ;- ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், இஷன் கிஷன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…