லீக்கான “துணிவு” திரைப்படத்தின் முக்கிய காட்சி.. படக்குழுவினர் அதிர்ச்சி..!
Author: Vignesh10 January 2023, 12:00 pm
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் H.வினோத் – அஜித் குமார் கூட்டணியில் உருவாக்கப்பட்ட 3ஆவது திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜான் கோக்கென், பவானி ரெட்டி, ஜி பி முத்து போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்தின் ஸ்டைலும், கெட்டப்பும் செம மாஸாக உள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா, கேங்கஸ்டா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன், துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் குஜராத்தில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம் என சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட கதை தான் என பலரும் உறுதி செய்து கூறி வந்தனர்.
இந்நிலையில், நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சி காண வெறித்தனமாக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக துணிவு படத்தில் இருந்து டைட்டில் கார்டு காட்சி லீக்காகியுள்ளது.
ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்க்கும் விஷயங்களில் ஒன்று அஜித்தின் பெயரை திரையில் பார்ப்பது தான். அந்த காட்சி தற்போது லீக்கானதை பார்த்த ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர்.
பல கோடியில் செலவு செய்து பல நபர்களின் கடிஉழைப்பில் உருவாகும் படத்தை கண்ணுக்கு தெரியாத சிலர் இணையத்தில் லீக் செய்து விடுகிறார்கள். சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த லீக் வீடியோவை யாரும் இனி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.