தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு : திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு எதிராக வந்த தகவலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 7:11 pm

திருச்சிக்கு வந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்படும் என தகவல் பரவியதால் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்தனர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5.45 மணியளவில் திருச்சி வந்தார்.

அவரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து விமான நிலையத்தில் நேரம் ஓய்வெடுத்த பின்னர் கவர்னர் காரில், தஞ்சை புறப்பட்டு சென்றார். நேற்று சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்று திருச்சி வரும் ஆளுநருக்கு தமிழ் அமைப்பினர் கருப்புக்கொடி காட்டிய எதிர்ப்பு தெரிவிக்க இருப்பதாக ஏற்பட்ட தகவலால் கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

மேலும், விமான நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை வரை பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டடுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 781

    0

    0