அலகு குத்தி கிரேன் மூலம் 30 அடி அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர் : வைரலாகும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2023, 9:17 pm
காஞ்சிபுரத்தில் 30 அடி அஜித் கட் அவுட்டிற்கு அலகு குத்தி மாலை அணிவித்து பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பாபு திரையரங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அஜித்தின் கட் அவுட்டிற்கு ரசிகர்கள் பூசணிக்காய், தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்து பாலாபிஷேகம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நெமிலி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்ற அஜித் ரசிகர் முதுகில் அலகு குத்தி கொண்டு கிரேன் மூலம் உயரே சென்று 30 அடி உயரமுள்ள தல அஜித்தின் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.