காரில் பெண் தோழியுடன் வந்த கல்லூரி மாணவன்.. செல்பி எடுக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்து : ஷாக் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 10:02 pm

கன்னியாகுமரி : அழகியமண்டபம் அருகே கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் பெண் நண்பருடன் செல்பி எடுக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் பிஜூ நர்சிங் கல்லூரி மாணவரான இவர் தனக்கு சொந்தமான வேகனார் காரில் தனது பெண் நண்பரான மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த நிஷா என்பவருடன் திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் பகுதி நோக்கி சென்றுள்ளார்

கார் இன்று மதியம் அழகியமண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது காரை ஓட்டி வந்த பிஜூ காரை ஓட்டி கொண்டிருக்கும் போதே பெண் நண்பருடன் செல்போனில் செல்பி எடுக்க முயன்றுள்ளார்

இதில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறமாக சென்றதோடு எதிரே சோனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த எட்வின் வசந்த் என்பவரின் ஆட்டோ மீதும் மோதி பல அடி தூரம் இழுத்து சென்று நின்றது

இதில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட சோனி படுகாயமடைந்த நிலையில் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்தனர்

விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில்

நர்சிங் கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சி.சி.டிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 747

    0

    0