நான் ஷர்மிகாவை விமர்சித்த போது வரிந்து கட்டிட்டு வந்தீங்களே.. இப்போ என்னாச்சு.. கொதித்த சின்மயி..!

Author: Vignesh
11 January 2023, 2:00 pm

இணையதளத்தில் தவறான தகவல்களை வீடியோ மூலம் பரப்புவதாக சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக சிறுபான்மையின அணி தலைவரான டெய்சி சரணின் மகள் தான் ஷர்மிகா சரண். இவர் டெய்சி ஹாஸ்பிடல் என்ற ஓரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

ஒரு மருத்துவ குறிப்பு என்ற பெயரில் வரும் 100 ஆண்டுகளில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அறிய வகை மருத்துவத்தை அவருடைய பார்வையாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், முரட்டு வைத்தியம், மலையடி சாத்திரம், ஹோமியோபதி, அம்பிகாபதி, அமராவதி என எல்லாவற்றிற்கும் வைத்தியம் பார்க்கும் இவரின் திறமைக்கு எல்லையே கிடையாது.

அவர் சொல்வதெல்லாம் சேர்த்து புத்தக அருங்கட்சியாகமே ஆரம்பிக்கலாம். அந்த அளவிற்கும் உருட்டாக உருட்டி வருகிறார். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் சரிமாணமாகாது என்றும், மாட்டை சாப்பிட்டால் நம்முடைய உடலில் பிரச்சனை ஏற்படும் என்றும் எல்லாம் கூறிய வீடியோ இணையதளத்தை வைரலாகியது.

அதே போல, 10 நாட்கள் பட்டினி இருந்து குறைக்கிற உடல் எடை 11வது நாள் ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 ஜாமுன் எடை வந்துவிடும் என்றும், குழந்தை பெத்துகொள்ள வேண்டுமென்றால் புருஷன் நல்லவனா இருந்தா போதும் என்றும், மற்றவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் பேசியது எல்லாம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஷர்மிகா அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக
தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இணையதளத்தில் தவறான தகவல்களை வீடியோ மூலம் பரப்புவதாக சித்த மருத்துவர் ஷர்மிகா மீது இந்திய மருத்துவ இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டாக்டர் ஷர்மிகா பிரபல ஊடகத்திற்கு கொடுத்திருந்த பேட்டியில் அவர் கூறியதாவது `நான் எல்லோருக்கும் சித்த மருத்துவம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி செய்து வருகிறேன் என்றும், நான் சென்னையில் உள்ள தனியார் சித்த மருத்துவ கல்லுரியில் பி.எஸ்.எம்.எஸ் என்ற மருத்துவ படிப்பை படித்து சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமணையில் சித்தமருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்துள்ளேன் என்றும், நான் என்ன படித்தேனோ அதை தான் நான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறேன் என்றும் தெரிவித்தார்.

அதே போல தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” புத்தகத்தில் மாட்டு இறைச்சியால் பல விதமான நோய்கள் வரும் என்று இருந்தது. அதை வைத்துதான் உடல் உழைப்பு உள்ளவர்கள் ஆடு, மாடு போன்றவற்றை சாப்பிடலாம் ஆனால் பலர் அமர்ந்து வேலை பார்த்து வருகின்றனர். அதனால் தான் மாட்டுக்கறி சாப்பிட கூடாது என்று கூறியதாகவும், ஆனால் அதற்கு என்னை பாஜகவுடன் தொடர்பு படுத்தி ஏன் பேசவேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

sharmika - updatenews360

மேலும், சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோ ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், கெமிக்கல் சார்ந்த பொருள்களை அதிகமாக தோல், முடிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், உதாரணத்திற்கு ஷாம்புகளை எல்லாம் பயன்படுத்தக் கூடாது. ஆர்கானிக் சித்த பொருட்களை பயன்படுத்துங்கள்.

நாம் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்கள் மாதிரி தான் உடம்பிற்கு வெளியே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஷாம்பூ போன்ற கெமிக்கல் பொருட்கள் பல விளைவுகளை உடம்பில் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார். இதை பார்த்த பாடகி சின்மயி அவர்கள், குடிக்கும் தண்ணீர் கூட தான் கெமிக்கல். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியுமா? என்று கிண்டல் கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

sharmika - updatenews360

இது குறித்து டாக்டர் ஷர்மிகாவிடம் பேட்டி ஒன்றும் எடுக்கப்பட்டது. அதில் டாக்டர் ஷர்மிகா கூறியிருந்தது, பாடகி சின்மயி நான் சொன்னதை தவறாக புரிந்து இருக்கிறார் எனவும், அவர்கள் சொன்ன மாதிரி தண்ணீர் கெமிக்கல் தான். இருந்தாலும், ஷாம்பூ போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பொருளுக்கும் சாதாரண கெமிக்கலுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது எனவும், எல்லோருக்கும் சொல்வதற்கு கருத்து இருக்கிறது, ஆனால் சொல்லும் விதம் ஒன்று இருக்கிறது எனவும் பாடகி சின்மயி சொன்னதைப் பற்றி எனக்கு கவலை இல்லை எனவும் டாக்டர் ஷர்மிகா தெரிவித்தார்.

sharmika - updatenews360

இப்படி ஒரு நிலையில் தான் ஷர்மிகா சமீபத்தில் அளித்த சில பேட்டிகள் சர்ச்சையான ஒரு நிலையில், கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு ரியாக்ஷன் வீடியோ அப்லோட் செய்திருந்தேன். நமது தோலே பெரிய வாய், அதில் கெமிக்கல்களை போடக் கூடாது. ஷாம்பூ போடக் கூடாது ரத்தத்தில் கலந்து விடும் என ஷர்மிகா பேசியிருந்தார்.

அவரை அப்போது நான் விமர்சித்த போது என்னை மிக மோசமாக விமர்சித்தார்கள் எனவும், ஆனால் இப்போது பலரும் அவரது வீடியோக்களை எடுத்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நான் ஷர்மிகாவை விமர்சித்த போது நான் ஏதோ பாவம் செய்துவிட்டது போல் என்னைத் திட்டினார்கள் எனவும் இதுகுறித்து பேசி இருக்கும் பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

chinmayi - updatenews360

மேலும், நான் சமீபத்தில் ஷர்மிகாவின் இன்னொரு வீடியோவை பார்த்தேன். அதில் குழந்தை பிறப்பது நல்லவர்களுக்கு மட்டும்தான் என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார் எனவும் பாடகி சின்மயி தெரிவித்திருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 604

    0

    0