ஓட்டல் ரூம்ல வச்சு… அந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்னை ஏமாத்திட்டாங்க ; பாலியல் புகார் கூறிய வெளிநாட்டு நடிகை!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
11 January 2023, 2:32 pm

பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது வெளிநாட்டு நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மெஹ்ரீன் ஷா. இவர் இஸ்லமாபாத்தில் நடந்த ஒரு படப்பின் போது இந்திய சினிமா தயாரிப்பாளர் ராஜ் குப்தா மற்றும் பாகிஸ்தான் டைரக்டர் சையத் எஹ்சான் அலி ஜைதி ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- நான் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றிருந்தேன். அங்கு வந்தவுடன் இருவரின் நடத்தையும் முற்றிலும் மாறியது. ராஜ் குப்தாவும், இஷான் அலியுடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. அவர்கள் இங்கு வேலை செய்ய வந்தார்களா அல்லது அவர்களுக்கு வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பது கூட எனக்குத் தெரியாது.

இருவரும் மோசமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு இணங்க மறுத்ததால் தான் துன்புறுத்தப்பட்டேன். பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் இதையெல்லாம் சொல்வதன் நோக்கம். மற்ற நடிகர்களை எச்சரிக்க விரும்பியதால் இப்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்காததால் தண்டனையாக பட்டினி கிடக்க வேண்டியதாக இருந்தது, எனக் கூறினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?