ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்குத் தடை ; புதிய கெடுபிடிகளை போட்ட தலிபான்கள்!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 8:40 am

ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது, பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

அந்த வகையில், கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தாலும், தலிபான்கள் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும் என்றும், மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் இதனை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!