பஸ் ஸ்டாண்டில் உறங்கிக் கொண்டிருந்த முதியவரை செருப்பால் அடித்து துவைத்த பெண் : விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 6:22 pm

திருப்பூர்: பணத்தை திருடியதாக உறங்கிக் கொண்டிருந்த நபரை கடுமையாக தாக்கிய பெண்மணியால் திருப்பூர் பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது

திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பெண்மணி ஒருவர் தனது பணத்தை ஓரமாக படுத்திருந்த நபர் திருடிவிட்டதாக கூறி செருப்பை கொண்டு கடுமையாக தாக்கினார்.

தகவலறிந்து தடுக்க வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விசாரணையில் உறங்கி கொண்டிருந்த நபர் பணத்தை திருட வில்லை என்பதும் பெண்மணி போதையில் பேருந்து நிலையத்தை நீண்ட நேரம் சுற்றித் திரிந்தும் தெரியவந்தது.

மேலும் அவர் வேதாரண்யத்தை சேர்ந்த பிரியா என்பதும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. அப்பெண் மதுபோதையில் இருந்த நிலையில் காவல்துறையினர் அப்பெண்ணை எச்சரித்து அனுப்பினர்.

https://vimeo.com/788635657

பெண் கடுமையாக தாக்கும் வீடியோவை அப்பகுதியில் இருந்த ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

  • Samantha dating Raj Nidimoru அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!