பேரணியாக காரில் பிரதமர் வந்த போது ஓடி வந்த இளைஞர்.. அடுத்த நிமிடமே மோடி செய்ததை பாருங்க.. வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 7:16 pm

கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்று உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திறந்த காரில் சாலை வழியே பேரணியாக அவர் பயணித்து உள்ளார். அவர் சென்ற வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவருடன் பாதுகாப்புக்காக உயரதிகாரிகளும் கூடவே சென்றனர். இந்நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி பேரணியின் நடுவில் இளைஞர் ஒருவர் திடீரென மாலையுடன் பிரதமர் மோடியை நோக்கி பாய்ந்து சென்றுள்ளார்.

இதனை கவனித்த பாதுகாப்புக்கு உடன் சென்ற அதிகாரிகள் அந்த இளைஞரை தடுத்தனர். எனினும், அவரது மாலையை பிரதமர் மோடி வாங்கி கொண்டார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த இளைஞரை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 461

    0

    0