தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உயிருக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு…!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2023, 9:17 am
தமிழகத்தில் சமீபகாலமாக சனாதன தர்மத்திற்கு எதிராக சில அரசியல் கட்சியினர் தங்களின் சுயலாபத்திற்காக காய் நகர்த்தி வருகின்றனர்.
ஆளுநர் மீதான தாக்குதலை ஆளும்கட்சியினர் சட்டசபையில் வெளிப்படையாக கண்டன தீர்மானம் மூலம் தெரிவித்தனர். கவர்னர் மீது தமிழக அரசு ஜனாதிபதியிடம் நேற்று திமுக எம்பிக்கள் புகார் அளித்தனர்.
இதே போல திமுக மீது பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் புகார் கூறி வருகிறார். மேலும் பாஜகவை வளர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தல் பயங்கரவாத தொடர்பு இருப்பதை முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இதன் பின்னர்தான் அந்த வழக்கு விசாரணையை போலீசார் வேகப்படுத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். இன்னும் பல அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியே வரும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு வழங்குவர். அண்ணாமலையை சுற்றி ஒன்று அல்லது 2 கமாண்டர் உள்பட மொத்தம் 31 போலீசார் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பாஜகவினர் வரவேற்றுள்ளனர்.