எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் : வருமான வரித்துறை சோதனையில் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 10:08 am

வருமான வரித்துறை நடத்திய சோதனையில் எம்எல்ஏ வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்காளத்தின் ஜங்கிபுர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜாகிர் ஹசன். இவருக்கு கொல்கத்தா, முர்ஷிதாபாத், டெல்லி உள்பட பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன.

இந்நிலையில், எம்.எல்.ஏ. ஜாகிர் ஹசன் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த புதன்கிழமை மாலை வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பல மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. ஜாகிர் ஹசன் வீட்டில் இருந்து 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் மந்திரி பார்தா சடர்ஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத சுமார் 50 கோடி ரூபாய் பணம், நகை பறிமுதல் செய்யபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • nazriya nazim fahadh open talk about why her absent in social media காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!