மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்.. திமுக அரசை வறுத்தெடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 11:02 am

புதுக்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக, சட்டசபையில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்தது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவிட் செய்துள்ளார்.

அதில், வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள் தொடரூம் சமூக அநீதி !

புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்!! என பதிவிட்டுள்ளார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…