இரவு நேரத்தில் வாகன ஓட்டியை மிரள வைத்த காட்டுயானை : ஆக்ரோஷமாக துரத்திய காட்சிகள் வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 11:57 am

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே சாலையில் இரவு நேரத்தில் சென்ற வாகனத்தை திடீரென துரத்திய யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் காராச்சிகொரை பகுதியிலிருந்து புதுபீர்கடவு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் வந்த வாகனத்தை வழிமறித்து நின்றதோடு திடீரென வாகனத்தை நோக்கி ஓடிவந்து வாகனத்தை துரத்தியது.

https://vimeo.com/788901308

சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி உயிர் தப்பினார். இதன் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?