“மாஸ்டர் பத்தி கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் புரிந்தது”… ராபர்ட் குறித்து முதல் முறையாக மனம் திறந்த ரச்சிதா..!

Author: Vignesh
13 January 2023, 12:21 pm

பிக்பாஸ் 6வது சீசன் முடிவுக்கு வர இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து ரசிகர்களின் முக்கிய பிரபலம் வெளியேறிவிட்டார். அதாவது ரச்சிதா வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு ஒரு சோகத்தை ஏற்படுத்தியது.

அவருக்கு பதிலாக சரியாக விளையாடாத இந்த நபரை வெளியேற்றி இருக்கலாம் என ஒவ்வொருவரும் ஒரு போட்டியாளரை கூறி வருகின்றனர்.

rachitha_mahalakshmi-1

90 நாட்களை கடந்து வீட்டில் இருந்த ரச்சிதா ஒரு நாளைக்கு ரூ. 28 ஆயிரம் சம்பளம் பேசி விளையாட வந்ததாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரஷிதா முதன் முறையாக ராபர்ட் மாஸ்டர் குறித்து பேசி இருக்கிறார். அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்த வரையில் அதிகம் பாசமாக பார்த்துக்கொண்டே இருந்தது ராபர்ட் மாஸ்டர் தான். அதனை ரட்சித்தாவும் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் `நான் கூறியது அப்படி பட்ட ஒரு நபர் இப்போது இல்லையே என்று தான் கூறியிருந்தேன் என்றும், அந்த வாரத்தை சொன்னதற்கான காரணம் பிக் பாஸ் வீட்டில் இத்தனை கேமராக்கள் இருந்தும் தன்னை மட்டுமே ஒரு கண் பார்ப்பதை போன்ற உணர்வைத்தான் கொடுத்து என்றும், எனவே அந்த நபரே இப்போது இல்லை என்று தான் பேசிக்கொண்டிருந்தேன் அதுதான் உண்மையான காரணம்.

Robert - updatenews360

மேலும் ராபர்ட் மாஸ்டர் குழந்தை போன்றவர், மாஸ்டர் செய்யும் எல்லா விஷியங்களிலும் ஏதாவது ஒரு குழந்தை தனம் கண்டிப்பாக இருக்கும் என்றும், அவருக்கு எடுத்து சொல்லியதே நான் தான். மேலும் மழையில் நினைந்தது அந்த நேரம் எனக்கு அம்மா நியாபகம் வந்தது, அதனை மறைக்கத்தான் நாள் மழையில் நினைத்தபடி இருந்தேன். அந்த காரணத்தினால் தான் இப்படியே விட்டால் சரியாக இருக்காது என்று பிக் பாஸும் பாடல் போட்டார் என தெரிவித்தார்.

மேலும் அனைத்து போட்டியாளர்களும் தான் கூப்பிட்டனர் ராபர்ட் மாஸ்டரும் கூப்பிட்டார். ஆனால் நான் மழையில் நனைகிறேன் உங்களுக்கு என்ன என்றுதான் இருந்தேன் எனவும், ஒருவேளை நான் எல்லோரிடமும் சிரித்து பேசுவதினால் அதனை வேறுமாதிரியாக எடுத்துக்கொண்டிருக்கலாம் எனவும், என்னுடைய சோகத்தை மற்றவர்களுக்கு எதற்கு பரப்ப வேண்டும் என்றுதான் அப்படி செய்தேன் என தெரிவித்தார்.

bigg boss day4_updatenews360

ராஜவம்சம் டாஸ்க் முடிவில் `ராபர்ட் மாஸ்டர் அந்த இடத்தை தவறாக புரிந்து கொண்டு, அழுததாகவும், நான் என்ன நினைத்தேன் என்றால் “நான் ஏதாவது தவறு செய்து என்னால் அழுகிறாரோ என்று தான் நான் சென்று பார்த்தேன் எனவும், ஆனால் அதற்கு பிறகுதான் தெரிந்தது அவர் தவறாக புரிந்து கொண்டார் என்று அதனை நானும் எப்படி யாவது பேசி பபுரிய வைக்கலாம் என்றுதான் எண்ணினேன் என தெரிவித்தார்.

rachitha_mahalakshmi-1

ஆனால் அப்படி அவர் அழுவதற்கான எந்த காரணமும் கிடையாது. அதற்க்கான இடமும் அது இல்லை எனவும், இது ஒரு விளையாட்டு அவ்வளவுதான். அதற்கு பிறகு தான் ஜெயிலில் அவர் என்னை தொடர்பு படுத்தி கொண்டார் என்று சொல்லும் போதுதான், இந்த விஷயம் வேறு விளையாட்டு வேறு என்று அவருக்கு புரிய வைத்தேன். உங்களுடைய தனிப்பட்ட எண்ணத்தை இந்த விளையாட்டில் கொண்டு வந்தீர்களா என்றால் உங்களுடைய விளையாட்டுதான் பாதிக்கப்படும் என்று அவருக்கு புரியவைத்தேன் என்று ரட்சிதா தெரிவித்தார்.

  • Upendra UI Movie First Card தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
  • Views: - 701

    5

    2