காட்டு யானைகள் மீது ரயில் மோதிய பயங்கரம்… 3 யானைகள் உடல் சிதைத்து உயிரிழந்து போன பரிதாபம்… சோகத்தில் வன ஆர்வலர்கள்!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 12:43 pm

அதிவேகமாக வந்த ரயில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு ரயில் பாதையில் ஹபரணை மற்றும் கல் ஓயா நிலையங்களுக்கு இடையில் ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் நேற்றிரவு அதிவேகமாக ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 3 யானைகள் மீது ரயில் பயங்கரமாக மோதியுள்ளது. இதில், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்கு பிறகு ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.30 மணியளவில் புறப்பட்ட ரயில், ஹடரெஸ் கொடுவ பிரதேசத்திற்கு அருகில் 5.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வேறு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தண்டவாளத்தை சீர்செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?