முதல் 3 நாளில் வாரிசு படத்தின் வசூல் இத்தனை கோடிகளா..? கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 10:55 am

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்பதை பார்க்கலாம்.

varisu-thunivu

துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்து நூலிழையில் முதல் இடத்தை நழுவவிட்டது.

varisu - updatenews360

இந்த நிலையில், தமிழகத்தில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் ரூ.19.43 கோடியும், 2வது நாளில் 9.75 கோடியும், 3வது நாளில் 7.11 கோடியும் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், கடந்த 3 தினங்களில் மட்டும் 35.29 கோடிகளை அள்ளியுள்ளது.

அதேவேளையில், உலகளவில் கடந்த 2 நாட்களில் மட்டும் துணிவு படம் சுமார் ரூ.37.6 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!