ராகுல் யாத்திரையில் பங்கேற்ற எம்.பி. திடீர் மரணம் : அதிர்ச்சியில் காங்கிரஸ்… பாரத் ஜோடோவில் நடந்த துயரச் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 11:27 am

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்ட எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கினார். 150 நாட்கள் நடைபெற உள்ள இந்தப் பயணம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களை கடந்து, தற்போது பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ராகுல் காந்தி நடை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார். அப்போது, அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி சந்தோக்சிங் சவுத்ரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். “எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்..,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/i/status/1614114512323629057
  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 398

    0

    0