64 வயதில் 3வது திருமணம் செய்த வாரிசு பட நடிகை..? சத்தியமா நம்பவே முடியலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
14 January 2023, 12:48 pm

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த பொங்கல் ரேஸ் வசூலில் வாரிசே முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார்.

varisu - updatenews360

இந்த நிலையில், வாரிசு பட நடிகை ஜெயசுதா 64 வயதில் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பல படங்கள் அம்மா ரோலில் நடித்து வருபவர் ஜெயசுதா. அவர் 1972ல் மிக இளம் வயதிலேயே நடிக்க தொடங்கியவர். அவர் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இருக்கிறார். தற்போது வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்து இருக்கிறார்.

ஜெயசுதா ஏற்கனவே 2வதாக நிதின் கபூர் என்ற நபரை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜெயசுதா தற்போது மூன்றாவது முறையாக ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலுக்கு தற்போது வரை அவர் மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 670

    1

    0