இந்திய அணிக்கு விளையாட சொன்னா மட்டும் முதுகு வலி வந்துடும்.. ஐபிஎல்னா எதுவும் நோகாது : கிரிக்கெட் வீரரை விமர்சித்த கபில் தேவ்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 12:52 pm

இந்தியா நியூசீலாந்து அணிகள் இடையே நடக்க இருக்கும் T20ODI தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது . இப்போவது விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட பும்ரா இந்த தொடரிலும் அணியில் இல்லை . இந்திய அணி முன்னாள் வீரர் கபில்தேவ் இது குறித்து பேசி உள்ளார்

பும்ரா முதுகு வலி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்துக்க T20 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. பின்னர் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த T20 தொடரில் 2-ஆவது 3-ஆவது போட்டியில் விளையாடினார் .

மீண்டும் முதுகுவலி காரணமாக , தென்னாபிரிக்க T20 தொடர் , T20 உலகக்கோப்பை தொடர், நியூசீலாந்து , இலங்கை தொடரில் விளையாடவில்லை . BCCI இவரை முக முக்கியமான ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் களம் இறக்க உள்ளோம் என்று அறிவித்தது .

ஆனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான முதல் 2 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது . இதில் பும்ரா பெயர் இடம்பெறாதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய அணி 32 T20 போட்டிகளில் விளையாடியது , அதில் பும்ரா 5 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஆனால் தொடர்ந்து 14 போட்டிகளில் IPL தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார் .

கபில் தேவ் பேசுகையில் BCCI , முக்கியமான இந்திய வீரர்கள் , இந்திய அணிக்காக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட எந்த ஒரு தனியார் தொடரும் பாதிக்காத படி பார்த்து கொள்ள வேண்டும்.

பும்ரா இந்திய அணியை விட, IPL மும்பை அணிக்கு தான் அதிக முக்கியத்துவம் குடுக்குறார் என்று சொல்ல கஷ்டமாக இருந்தாலும். கணக்கை பார்க்கையில் அது தான் உண்மை என்று தெரிகிறது . சென்ற ஆண்டும், இந்த ஆண்டும், பும்ரா முக்கியமான உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது . இந்த ஆண்டு நடக்கும் IPL தொடரில் இவர் பங்கேற்றால் , இனிமே இந்திய அணியில் பும்ராவை சேர்க்காமல் இருப்பது தான் நியாயம் என்றார்

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!