சட்டமன்றத்துக்குள் நுழைகிறாரா அண்ணாமலை? ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி? பிரபல நடிகை பரபரப்பு ட்வீட்!!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2023, 2:44 pm
ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் செல்வாரா என்ற சந்தேகம் பிரபல நடிகையின் ட்விட்டால் ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலால் அண்மையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அண்ணாமலையையும், பாஜக நிர்வாகிகளையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், வேறு கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் இணைய தயார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, காயத்ரி ரகுராமை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்து தமிழக பாஜக அறிவித்திருந்தது. இதையடுத்து கொந்தளித்த காயத்ரி, தன்னுடைய உழைப்பு வீணாகிவிட்டது. என் இளமை பறிபோய்விட்டது என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என பதிவிட்டுள்ளார்.