நடிகர் தனுஷ் உடன் எவ்ளோ டைம் அந்த சீன்ல நடிச்சீங்க: பிரபல நடிகையின் ட்வீட்..!
Author: Udayachandran RadhaKrishnan16 January 2023, 1:00 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவர்களின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் மாறன். இப்படம் வெளியாகி மிக சுமாரான விமர்சனத்தையே பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.
இவர் பேட்ட, மாஸ்டர் ஆகிய படங்களில் இதற்க்கு முன் நடித்திருந்தார். திரைப்படங்களை விட இவர் தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பதே உண்மை. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சில மாதங்களுக்கு முன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
அப்போது, நெட்டிசன் ஒருவர், மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். இதற்கு நடிகை மாளவிகா மோகனன் தனது பதில் மூலம் அவரின் வாயடைக்க வைத்திருந்தார். மாளவிகாவின் ட்விட் அப்போது செம வைரலானது. அந்த பதிவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர்.
The inside of your head is a sad place indeed
— malavika mohanan (@MalavikaM_) May 18, 2022