கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்: சாய் பல்லவி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Author: Udayachandran RadhaKrishnan
16 January 2023, 6:00 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

Saipallavi-Updatenews360-4

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டாவுடன் எந்த சூழ்நிலையிலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருப்பது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் தேவாரகொண்டா.

அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று வளர்ந்து வரும் நடிகை சாய் பல்லவி கூறியிருப்பது இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம், சமீபத்தில் திரைக்கு வந்த டியர் காம்ரேட் திரைப்படத்தில் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அணுகியது நடிகை சாய் பல்லவியை தான். ஆனால் இந்த திரைப்படத்தில் முத்தக் காட்சிகள் மற்றும் ரொமாண்டிக் காட்சிகள் இருந்ததால் அந்த படத்தை நிராகரித்திருக்கிறார் நடிகை சாய்பல்லவி.

vijaydevarkonda-updatenews360 (3)

மேலும், விஜய் தேவாரகொண்டா படங்கள் என்றாலே அதில் ரொமான்ஸ் காட்சிகள் லிப்லாக் காட்சிகள் இடம் பெறுகின்றன. எனவே, அவருடன் எந்த படத்திலும் நான் நடிக்க மாட்டேன் என்ற முடிவு எடுத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி என்று கூறப்படுகிறது.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…