பொங்கல் கொண்டாட்டத்தின் போது திடீரென வந்த துக்க செய்தி… பத்திரிக்கையாளரிடம் பைக்கை வாங்கி புறப்பட்ட இபிஎஸ் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 7:08 pm

பொங்கல் விழாவை கொண்டாட்டத்திற்கு சென்ற போது, திடீரென வந்த போன் காலை தொடர்ந்து, அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இருசக்கர வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொங்கல் விழா கொண்டாட தயாராக இருந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பழனிச்சாமி என்பவர் உயிரிழந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக பொங்கல் விழாவை கொண்டாடாமல் அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் இருசக்கர வாகனத்தை வாங்கி கிளம்பினார். அவரின் உதவியாளர் இருசக்கர வாகனத்தை ஓட்ட அவர் பின்னால் அமர்ந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!