‘உன்னோட அன்பு மட்டும்தான் வேணும்’ : கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி மதுபோதையில் பெண் அலப்பறை..!

Author: Babu Lakshmanan
17 January 2023, 8:55 am

தருமபுரி ; கோபிநாதம்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி மதுபோதையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி அருகே உள்ள பி.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்த சுமதி (39) இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர் . இவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ள நிலையில், பி.துறிஞ்சிப்பட்டியில் தனியாக வசித்து வந்த சுமதி கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சுப்ரமணி (35) என்பவருடன் சேர்ந்து கோவை சூலூரில் தங்கி செல்போன் டவர் அமைக்கும் பணியினை கடந்த ஒன்னரை வருடங்களாக செய்து வந்துள்ளனர்.

அப்போது, இவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று பொங்கலுக்கு கோபிநாதம்பட்டி கூட்ரோடிற்கு வந்துள்ளனர்.

அப்போது, கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள சுப்ரமணி வீட்டில் இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியாக தெரிகிறது. அப்போது, சுமதி தன்னிடம் இருந்து வாங்கிய அரைப் பவுன் நகையை திரும்ப தரவேண்டும் எனவும், தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சுப்ரமணியின் வீட்டை விட்டு வெளியேறிய சுமதி, கோபிநாதம்பட்டி கூட்ரோட்டியில் உள்ள செல்போன் டவரில் ஏறி சுப்ரமணியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும், நகையை மீட்டு தர கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் துறையினர் மது போதையில் இருந்த சுமதியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மதுபோதையில் இருந்த சுமதி தன்னை தன் காதலன் சுப்ரமணியுடன் சேர்த்து வையுங்கள் என்றும், தனக்கு சேர வேண்டிய நகையை வாங்கி தர வேண்டும் எனவும் கூறினார். ஏற்கனவே இதே போல் கோவையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றதாகவும், அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்து நேரில் பேசினார் என தெரிவித்து, காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!