விளாத்திகுளம் வைப்பாற்றில் களைகட்டிய காணும் பொங்கல் ; 3 ஆண்டுகளுக்கு பிறகு அலைமோதும் கூட்டம்… குடும்பம் குடும்பமாக குதூகலம்!!

Author: Babu Lakshmanan
17 January 2023, 11:36 am

சேலம் ; 3 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறுவில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குதூகல கொண்டாடினர்.

விடுமுறையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில், ஆண்டுதோறும் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு தங்களது குடும்பங்களுடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு செல்லும் போது வீட்டில் சமைத்த உணவுகள், திண்பண்டங்கள், கரும்பு பணங்கிழங்கு உள்ளிட்டவற்றை ஆற்றுக்குக் கொண்டு வந்து அங்கு சந்திக்கும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அவற்றை கொடுத்து, தங்களது அன்பை பரிமாறிக்கொண்டு, அவர்களுடன் சேர்ந்து விளையாடி ஆண்டுக்கொருமுறை இதுபோன்று மகிழ்ச்சியாக பொங்கல் விடுமுறையை கழித்து வருகின்றனர்.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் இந்த வைப்பாற்றில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு இன்று வைப்பாற்றுக்கு உற்சாகம் பொங்க மகிழ்ச்சியாக தங்களது குடும்பத்துடன் வந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

இதனால், விளாத்திகுளம் வைப்பாறானது மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படுகிறது.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 471

    0

    0