நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 4:56 pm

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 18-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுத்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 2023 – சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறந்த பதிப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் “இந்த கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர். வரும் காலங்களில் இக்கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இக்கண்காட்சி விற்பனைக்காக தொடங்கப்பட்டவில்லை. தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்தப்படும்.

மேலும் மற்ற நாடுகளில் சிறப்பாக உள்ள பதிப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

அப்போது வரும் 18-ஆம் தேதி பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை விடுமுறையா என நிறைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால் அந்த மாதிரியான எந்த அறிவிப்புகளையும், அரசு வெளியிடவில்லை” என தெரிவித்தார்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?