பணப்பெட்டியுடன் பாதியில் வெளியேறிய முக்கிய பிரபலம் : பிக் பாஸில் எதிர்பார்க்காத டுவிஸ்ட்!!
Author: Babu Lakshmanan18 January 2023, 10:25 am
பிரபல தனியார் தொலைக்காட்சியில் 6வது சீசனா பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல கட்ட எவிக்ஷன், வைல்டு கார்டு என்ட்ரி என அடுத்தடுத்து சுவாரஸ்யங்களுடன் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
100 நாட்களை எட்டிவிட்ட நிலையில், விரைவில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் கடைசி நாள் வரப்போகிறது. அந்த நாளில் 6வது சீசன் பட்டத்தை வெல்லப்போவது யார்..? என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ADK வெளியேறி இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் குறிப்பிட்ட தொகையுடன் பணப்பெட்டி வைப்பது வழக்கம். இந்த முறையும் அப்படி ஒரு பணப்பெட்டி வைக்கப்படுவதாகவும், அதனை கதிரவன் எடுத்த செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், முதல் மற்றும் இரண்டாவது இடத்தை அசீம் மற்றும் விக்ரமன் பிடிப்பது உறுதி என்கின்றனர்.