சேலத்தில் எருதாட்டத்தின் போது அலப்பறை… குடிபோதையில் இருந்த சிறுவனை புரட்டியெடுத்த போலீசார் : பொதுமக்கள் ஷாக்!!

Author: Babu Lakshmanan
18 January 2023, 11:19 am

சேலத்தில் எருதாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சேலம் மாநகர் ரெட்டிபட்டி அருகே காணும் பொங்கலை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.

அப்போது, சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன், (குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் என கூறப்படுகிறது) அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவரை பார்த்த அழகாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார், ஏதோ கொலை குற்றவாளி பிடிப்பது போல் சுற்றி வளைத்து பிடித்து அவரை சரமாரியாக தாக்கினார்கள்.

வலியால் துடித்த அச்சிறுவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, அவரை விரட்டிச் சென்று பிடித்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கி அழைத்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அச்சிறுவன், “என்னை என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள், வயிற்றில் மட்டும் அடிக்காதீர்கள்,” என கெஞ்ச தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சிறுவனின் பேச்சை கண்டு கொள்ளாத போலீசார் ஏதோ மாட்டை அடிப்பது போல் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 529

    1

    0