செய்தி கேட்டு நேரில் சென்ற முக அழகிரி ; தட்டிக்கொடுத்து நடிகர் வடிவேலுக்கு ஆறுதல்!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 11:57 am

நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் மறைவிற்கு முக அழகிரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மதுரை விரகனூர் பகுதியில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி வசித்து வந்தார். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சரோஜினி காலமானார்.

இந்த நிலையில், பல்வேறு திரை பிரபலங்கள் வடிவேலு தாயார் இறப்பிற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, வடிவேலு அவர்களின் தாயார் மறைவிற்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, வடிவேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 465

    0

    0