முதலமைச்சர் படத்தை வைத்து சூதாட்டம்… கண்டுகொள்ளாத கட்சி தொண்டர்கள் : வேடிக்கை பார்த்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 1:19 pm

முன்னாள் முதலமைச்சர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் புகைப்படங்களை பயன்படுத்தி சூதாட்டம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சட்டராய் கிராமத்தில் நடைபெற்று வரும் சேவல் சண்டைக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் மைதானத்தில் முன்னாள் முதல் சந்திரபாபு நாயுடு, இன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் படத்தை பயன்படுத்தி ஒருவர் ‘வை ராஜா வை’ என்ற ரீதியில் சூதாட்டம் நடத்தி வருகிறார்.

இந்த சூதாட்டத்தில் சந்திரபாபு நாயுடுவை தலைவராக கொண்ட தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்கள், ஜெகன்மோகன் ரெட்டியை தலைவராக கொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் யாரும் இதுவரை எங்கள் தலைவரின் படத்தை ஏன் இப்படி பயன்படுத்துகிறாய் என்று கேட்கவில்லை. போலீஸாரும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?