குளிர் காலத்தில் உங்கள் நீர்ச்சத்தை நிரப்ப உதவும் சுவையான பானங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
19 January 2023, 5:05 pm

குளிர்கால பிரச்சினைகளில் வறண்ட மற்றும் மந்தமான சருமம் அடங்கும். சரியான நீரேற்றத்துடன் இருப்பதன் மூலம் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலை காரணமாக நாம் போதுமான தண்ணீர் குடிக்கத் தவறுகிறோம். இதன் விளைவாக, நாம் நீரிழப்புக்கு ஆளாகிறோம். நீரிழப்பு வளர்சிதை மாற்றம், மந்தம், தலைவலி மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தலாம். எனவே, நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது அவசியம். ஆகவே உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைக்க பின்வரும் ஆரோக்கியமான பானங்களை முயற்சி செய்யலாம்.

குளிர்காலத்தில் நீரேற்றமாக இருக்க ஆரோக்கியமான பானங்கள்:-
◆சூப்கள்
குளிரில் சூடான சூப் குடிப்பது உங்களுக்கு இதமளிக்கும். காய்கறிகளை தண்ணீரில் சமைப்பதன் மூலம் இதை எளிமையாக தயாரித்து விடலாம். உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, தக்காளி மற்றும் பிற காய்கறிகளைப் பயன்படுத்தி காய்கறி சூப் தயாரிக்கலாம். நீரேற்றமாக இருக்க, நீங்கள் கீரை சூப் கூட செய்து சாப்பிடலாம். உங்கள் சூப்பில் காளான்களைச் சேர்ப்பது ஒரு சிறந்த தேர்வாகும்.

பச்சை சாறுகள்:
பச்சை சாறுகள் மதிய உணவுக்குப் பிறகு சாப்பிட ஒரு நல்ல வழி மற்றும் பல்வேறு வழிகளில் இதனை செய்து சாப்பிடலாம். காய்கறிகளில் வைட்டமின்கள் கே மற்றும் சி நிறைந்துள்ளன. இது கொழுப்பைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். ஆனால் சாறாக குடிப்பது காய்கறிகளிலிருந்து நார்ச்சத்தை நீக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே போதுமான உணவு நார்ச்சத்து சாப்பிடுவதற்கு மாற்றாக இதனை பயன்படுத்தப்படக்கூடாது.

எலுமிச்சை நீர்:
வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை கல் உப்புடன் சேர்த்து குடிப்பது நீரின் சுவையை உயர்த்தி, உங்களுக்கு மிகவும் தேவையான நீரேற்றத்துடன் சிறிது வைட்டமின் சியையும் வழங்கும். எலுமிச்சை நீர் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும். இது பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது சோடியம் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு கனிமமாகும். மேலும் உப்பு மூலம் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கடைசியாக, எலுமிச்சை நீரின் பெக்டின், இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. இது பசியை குறைக்க உதவுகிறது.

  • Sawadeeka Songஅட்டகாசகமாக வெளிவந்த விடாமுயற்சி “Sawadeeka”பாடல்…இருங்க பாய் இது ஆரம்பம் மட்டும் தான்..!
  • Views: - 386

    0

    0