பட்டப்பகலில் ஐடி ஊழியர் சம்பட்டியால் அடித்துக்கொலை : சொந்த அத்தை மகனே செய்த வெறிச்செயல் : விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 6:09 pm

திண்டுக்கல் அருகே சொத்து தகராறு காரணமாக இளைஞர் சம்பட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சென்னம்மா நாயக்கன்பட்டி அருகே உள்ள குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி (32) இவர் பிசிஏ படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் இருந்து பணி செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் ராஜபாண்டியன் தந்தை பாண்டியனுக்கும், தந்தையின் சகோதரி அய்யம்மாள் என்பவருக்கும் சொத்து தகராறு கடத்த ஏழு வருடமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே அய்யம்மாளின் மகன் சக்திவேல் என்பவர் தனக்கு சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும் எனக் கூறி தகராறு செய்து வந்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்.

இதனிடையே, இன்று வீட்டில் ராஜபாண்டி மட்டும் இருந்துள்ள நிலையில், அங்கு வந்த சக்திவேல் தனது ஆதரவுடன் சேர்ந்து ராஜபாண்டியை அடித்து உதைத்ததோடு, சம்பட்டியால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் அவருடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 471

    0

    0