மீதமான இட்லியை வைத்து மொறு மொறு பக்கோடா!!!

Author: Hemalatha Ramkumar
19 January 2023, 7:33 pm

பொதுவாக காலை டிபனுக்கு செய்த இட்லி மீந்து விட்டால், அதனை தாளித்து இட்லி உப்புமா செய்து விடுவோம். ஒரு சிலருக்கு அது பிடிக்கும், ஒரு சிலர் அதை விரும்ப மாட்டார்கள். ஆகையால் மீந்து போன இட்லியை வைத்து, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு ரெசிபி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

இட்லி பக்கோடா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
இட்லி 4
கடலை மாவு –
அரை கப்
அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
சோம்பு – ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – இரண்டு
உப்பு – 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
கருவேப்பிலை – ஒரு கொத்து
சமையல் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் மீதமான இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

*பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்து எடுக்கவும்.

*இப்போது நமக்கு மாவு போன்ற பதத்திற்கு கிடைத்து விடும்.

*இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து, கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.

*அடுத்து இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

*தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கைகளால் நன்கு கிளறி விடவும். தேவைப்பட்டால் லேசாக தெளித்து கொள்ளலாம்.

*இப்போது பக்கோடா மாவு தயாராக உள்ளது.

*அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு சிறு பேட்சாக போட்டு சிவக்க விட்டு எடுத்தால் மொறு மொறு இட்லி பக்கோடா தயார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…