பிளாஸ்டிக் சர்ஜரியா?.. முகம் மாறி அடையாளம் தெரியாமல் இருக்கும் பிரபல சீரியல் நடிகை..! ஷாக்கான ரசிகர்கள்…!
Author: Vignesh20 January 2023, 12:30 pm
சின்னத்திரை சீரியல்கள் மூலம் பல நடிகைகள் பிரபலமாகி வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று சிறு கதாபாத்திரத்தில் ஆவது நடித்து பிரபலமாகிவிடுவார்கள்.
அந்த வகையில், கோவையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக்குமார் விஜய் டிவியில் புகழ்பெற்ற தொடரான செந்தில், ஸ்ரீஜா நடித்த மாப்பிள்ளை சீரியல் மூலம் பிரபலமானவர் ஜனனி, அதன்பின் ஆயுத எழுத்து, மெளன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இவரின் துணிச்சலான நடிப்பை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது என்று கூறலாம்.
இவரும் மற்ற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்று கூறலாம்.
அதன் பின் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் ஜனனி அசோக்குமார் நடித்து வந்தார். இடையில் சில காலம் காணமல் போன ஜனனி அசோக்குமார் தற்போது முகம் மாறி அடையாளம் தெரியாமல் குண்டாக காணப்பட்டுள்ளது.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜனனியா இது பிளாஸ்டிக் சர்ஜரியா? பண்ணிருக்கீங்க என்று ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.