குழந்தைக்காக கைக் கோர்த்த மனிதநேயம்… மின்னல் வேகத்தில் வந்த ‘இதயம்’ : நெகிழ வைத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 12:49 pm

விசாகப்பட்டினத்தில் இருந்து விமான மூலம் திருப்பதிக்கு குழந்தைக்காக மின்னல் வேகத்தில் ஆம்புலன்சில் இருந்து வந்த பெண்ணின் இதயம்.

விசாகப்பட்டினம் பிஹெச்எல் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் ஆனந்த ராவ். அவருடைய மனைவி சன்னியாசம்மா. கடந்த 16ஆம் தேதி சன்னியாசம்மா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் மூளை சாவு அடைந்து விட்ட அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவன் ஆனந்த்ராவ் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை சன்னியாசம்மாவின் இதயம் உடலில் இருந்து அகற்றப்பட்டு கிரீன் சேனல் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் விசாகப்பட்டினம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கிருந்து விமான மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த இதயத்தை போலீசார் கிரீன் சேனல் முறையில் விமான நிலையத்திலிருந்து திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அந்த இதையே இன்னும் சற்று நேரத்தில் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதை அறுவை சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேறொரு குழந்தைக்கு பொருத்தப்பட உள்ளது.

திருப்பதி விமான நிலையம் முதல் மருத்துவமனை வரை போக்குவரத்தை நிறுத்திய போலீசார் கிரீன் சேனல் முறையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?