‘உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதிங்க’ மிரட்டல் விடுத்த அரசியல் கட்சியை வார்னிங் செய்த வனிதா!!
Author: Vignesh20 January 2023, 3:30 pm
வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
3 திருமணங்கள் செய்த வனிதா அனைவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார்.

நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார் அவர்.

இந்நிலையில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக விக்ரமன் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு, அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் கடும் எதிர்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில், வனிதாவின் இந்த எதிர்ப்பை தொடர்ந்து அவருக்கு அக்கட்சியினர் சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
“தான் பேசிய யூடியூப் சேனலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தும், தன்னை எச்சரிக்கவும், யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்ல என்றும், உங்க அரசியல் புத்தி எண்ணனு காலம் காலமா பாத்திருக்கோம் என்றும், நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க என்றும் உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதிங்க என பகிரங்கமாக இதுகுறித்து மற்றொரு பதிவில் வனிதா குறிப்பிட்டுள்ளார்.
What do you say for this … its all a political stunt… how can a respected political leader and sitting MP influence his cadres to vote for a contestant in a reality show… https://t.co/8dnqcw2nIB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 18, 2023
ஒரு பிக்பாஸ் ஜெயிக்கிறதுக்கே இவ்வளவு அரஜாகம்னா, இவங்கள மாதிரி அரசியல் கட்சிகள், தேர்தல் வரும்போது என்னென்ன செய்வாங்க என கேள்வி எழுப்பி உள்ளார். நீங்க உங்க அரசியல் வேலையை பாருங்க என்றும், நான் உங்கள தொந்தரவு பண்ணல என்றும், நீங்களும் எங்கள தொந்தரவு செய்யாதீங்க.” என அந்த பதிவில் வனிதா குறிப்பிட்டுள்ளார்.
Making threatening phone calls to relevant youtube channel and trying to warn me ..??yarukkum yethukkum bayandhava nan illai … unga arasiyal buddhi ennanu kalam kalama pathirkom.. nermaiya makkalukku nalladhu panni munnera paarunga unga arasiyal ellam enkitta vechikathinga.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 19, 2023