டாஸ்மாக் நேரம் குறைகிறதா..? பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு… உடனே நீதிமன்றம் போட்ட உத்தரவு

Author: Babu Lakshmanan
20 January 2023, 7:15 pm

டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரை மணி நேரம் முன்கூட்டியே மூட முடியுமா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இரவு 10 மணி வரை செயல்படுவதால், மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் தலையிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்கள் செயல்படும் நேரத்தை 10 மணிக்கு மேல் நீட்டிப்பது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவதற்கு வாய்ப்புள்ளதா..? என்பது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • ஓடிடி-யில் வெளியாகும் தீபாவளி மாஸ் ஹிட் படம்…அட எப்போங்க..!
  • Views: - 386

    0

    0